யானைகள் அதிகம் உலவும் இடத்தில் கும்கி 2

பிரபுசாலமன் இயக்கத்தில் உருவாகும் 'கும்கி 2' படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
யானைகள் அதிகம் உலவும் இடத்தில் கும்கி 2
Published on
விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் பிரபுசாலமன் இயக்கி படம் ‘கும்கி’. யானையை மையமாக வைத்து அதில் காதல், சென்டிமென்ட் என கலந்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் பிரபு சாலமன்.

'கும்கி 2' படத்துக்காக படப்பிடிப்பு இடங்களைத் தேர்வு செய்து வந்த படக்குழு, தாய்லாந்தை தேர்வு செய்து அங்கு முதல் கட்ட படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. தாய்லாந்து நிறைய யானைகள் உலவும் இடம் என்பதால், அங்கு படத்தின் பிரதான காட்சிகளை படமாக்க முடிவு செய்துள்ளார் பிரபுசாலமன்.

இதன் நாயகனாக லிங்குசாமியின் மருமகன் மதியும், நாயகியாக நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் நடித்து வருகிறார்கள். இப்படத்தை பென் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.
X

Maalai Malar
www.maalaimalar.com