கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார், மடோனா நடிப்பில் உருவாகியிருக்கும் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
கொம்பு வச்ச சிங்கம்டா
கொம்பு வச்ச சிங்கம்டா
Published on

‘சுந்தரபாண்டியன்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சசிகுமார் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, இனிகோ பிரபாகரன், சௌந்தரராஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். 2012ம் ஆண்டு வெளியான இப்படம் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. 

இப்படத்தை தொடர்ந்து, இது கதிர்வேலன் காதல், சத்ரியன் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். தற்போது ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்தை இயக்கி வருகிறார். சசிகுமார் - மடோனா செபஸ்டியன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்.டி.வி. நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com