பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் இருக்கிறேன் - குஷ்பு

நடிகை குஷ்பு, கடந்த 10 ஆண்டுகளாக படத்தில் நடிக்காத நிலையில், அவரது நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் ‘அஞ்ஞாதவாசி’ படம் தன்னை பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் மாற்றி இருப்பதாக குஷ்பு தெரிவித்திருக்கிறார்.
பிரசவத்துக்கு காத்திருக்கும் தாய் போல் இருக்கிறேன் - குஷ்பு
Published on

தமிழ், தெலுங்கு பட உலகை கலக்கியவர் குஷ்பு. பட தயாரிப்பு, அரசியல் என்று களம் இறங்கியுள்ள குஷ்பு சமீப காலமாக சினிமாவில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறார்.

திரிவிக்ரம் இயக்கத்தில் பவன்கல்யாண் நாயகனாக நடித்திருக்கும் இந்த படத்தின் பெயர் ‘அஞ்ஞாதவாசி’. இது பவன்கல்யாணின் 25-வது படம். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இதில், குஷ்பு பவன்கல்யாணின் வளர்ப்பு தாயாக நடித்திருக்கிறார்.

இன்று திரைக்கு வரும் இந்த படம் பற்றி கூறிய குஷ்பு....

“தெலுங்கு சினிமாவில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ‘அஞ்ஞாதவாசி’ படத்தில் நடித்திருக்கிறேன். இந்த படம் வெளியாவதை பிரசவத்துக்கு காத்திருக்கும் தாயின் மனநிலையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். என் வயிற்றில் வண்ணத்து பூச்சி பறப்பது போன்று உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com