புதிய அவதாரம் எடுத்த கேஜிஎப் கருடா

சூப்பர் ஹிட்டான கேஜிஎப் படத்தில் மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்து அசத்திய கருடா தற்போது புதிய அவதாரம் ஒன்று எடுத்துள்ளார்.
கருடா ராம்
கருடா ராம்
Published on

யாஷ் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியான படம் ‘கேஜிஎப்’. இதில் வில்லனாக கருடா என்ற கதாபாத்திரத்தில் ராம் என்பவர் நடித்திருந்தார். இவரது மிரட்டலான நடிப்பு ரசிகர்களை பெரிதளவு ஈர்த்தது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டானது. தற்போது கேஜிஎப் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது.

இந்நிலையில், கருடா ராம் பாடகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘13ம் நம்பர் வீடு’ என்ற படத்தில் பாடகராக அறிமுகமாக இருக்கிறார் கருடா ராம். இதற்கான பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இந்த பாடல் படத்திற்கு பலம் சேர்க்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

13ம் நம்பர் வீடு படத்தில் ரமணா, சஞ்சீவ், வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தை விவி கதிரேசன் இயக்கியுள்ளார். இப்படம் ஓடிடி தளத்தில் நவம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com