மோகன் லாலுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்

தமிழ், தெலுங்கு என முன்னணி நாயகியான கீர்த்தி சுரேஷ் 5 வருடங்களுக்கு பிறகு பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன் லால் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #Marakkar #MohanLal #KeerthySuresh
மோகன் லாலுக்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்
Published on

கீர்த்தி சுரேஷ் அறிமுகமானதே பிரியதர்‌ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த கீதாஞ்சலி படத்தில் தான்.

தற்போது முன்னணி நடிகையாகிவிட்ட கீர்த்தி சுரேசுக்கு தமிழ், தெலுங்கு என 2 மொழிகளிலும் பெரிய மார்க்கெட் உருவாகி இருக்கிறது. அவருக்கு 3 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்க தயாராக உள்ளனர்.

ஆனால் அவர் யாரும் எதிர்பாராத வகையில் மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். மோகன்லால் - பிரியதர்‌ஷன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் மராக்கர்: அரபிக்கடலிண்டே சிம்ஹம்.

பிரணவ் மோகன்லால், கல்யாணி பிரியதர்ஷன்

பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாராகி வரும் இந்தப் படத்தில் மோகன் லாலின் இளவயது கதாபாத்திரத்தில் அவரது மகன் பிரணவ் மோகன்லால் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரியதர்‌ஷனின் மகளான கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். தன்னை அறிமுகப்படுத்திய கூட்டணி என்பதால் நன்றிக்கடனுக்காக 5 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் நடிக்கிறார். #Marakkar #MohanLal #KeerthySuresh

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com