பழம்பெரும் நடிகையால் வருத்தத்தில் இருக்கும் கீர்த்திசுரேஷ்

மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருக்கும் கீர்த்தி சுரேஷ், சாவித்ரி கதபாத்திரத்திற்கு தகுதியானவர் அல்ல என்ற பழம்பெரும் நடிகை ஜமுனாவின் கருத்தால் கீர்த்தி சுரேஷ் வருத்தத்தில் உள்ளாராம். #KeerthySuresh
பழம்பெரும் நடிகையால் வருத்தத்தில் இருக்கும் கீர்த்திசுரேஷ்
Published on

மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்றும் சினிமா படமாக தயாராகிறது. இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேசும், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மானும் நடிக்கின்றனர். நாக் அஸ்வின் இயக்குகிறார். சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதற்கு பழம்பெரும் நடிகை ஜமுனா கருத்து தெரிவித்திருந்தார். 

இது பற்றி கூறியுள்ள பழம் பெரும் நடிகை ஜமுனா, “சாவித்ரியுடன் நடித்தவர்களில் நான் மட்டும் தான் உயிரோடு இருக்கிறேன். என்னிடம் சாவித்ரி பற்றி கேட்காமல் படம் எடுத்து இருப்பது வேதனையாக இருக்கிறது. சாவித்ரி வேடத்துக்கு கீர்த்திசுரேஷ் பொருத்தமானவர் அல்ல” என்று குறை கூறி இருந்தார். படத்தை பார்க்காமல் மூத்த நடிகை குறை கூறியதால் கீர்த்திசுரேஷ் வருத்தம் அடைந்துள்ளாராம். #KeerthySuresh #NadigaiyarThilagam #Mahanati

X

Maalai Malar
www.maalaimalar.com