கீ

காலீஸ் இயக்கத்தில் ஜீவா-நிக்கி கல்ராணி இணைந்து நடித்து வரும் ‘கீ’ படத்தின் முன்னோட்டம்.
கீ
Published on

இதன் அடுத்த படைப்பாக ஜீவா நடிப்பில் உருவாக இருக்கும் படம் ‘கீ’. இது இந்த நிறுவனத்தின் 10-வது படம். இதில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்கள். இரண்டாம் நாயகியாக அனைகா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசை-விஷால் சந்திர சேகர், ஒளிப்பதிவு-அனிஷ் தருண் குமார், படத் தொகுப்பு-நாகூரான், தயாரிப்பு-எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை-அசோக், நடனம்- ‘பாபா’ பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ்.

செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி தொடங்கியது. மே 20 வரை மொத்த படப் பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com