பூஜையுடன் துவங்கிய கழுகு-2 படப்பிடிப்பு

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி நடிப்பில் வெளியான `கழுகு' படத்தின் இரண்டாவது பாகத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #Kazhugu2 #Krishna
பூஜையுடன் துவங்கிய கழுகு-2 படப்பிடிப்பு
Published on

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா - பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலரும் நடித்து கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான படம் கழுகு. காதல் கலந்த காமெடி படமாக உருவான இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது.

கழுகு-2 படத்தில் கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கின்றனர். காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சத்யசிவா இயக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பை கவனிக்கிறார். 

முதல் பாகத்தில் பணியாற்றிய கலைஞர்கள் பலரும் இந்த பாகத்திலும் இணைகின்றனர். கழுகு-2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் மூணாரில் இன்று துவங்கியிருக்கிறது. ஜி.கே.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிங்கார வேலன் பிக்சர்ஸ் உலகம் முழுக்க ரிலீஸ் செய்கிறது. #Kazhugu2 #Krishna #BinduMadhavi

X

Maalai Malar
www.maalaimalar.com