நடிப்பதை விட படம் இயக்கவே விரும்புகிறேன் - இயக்குநர் டீகே

‘சீதக்காதி’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இருக்கும் இயக்குநர் டீகே, தான் படங்களை இயக்கவே விரும்புவதாக கூறினார். #Katteri #Deekay
நடிப்பதை விட படம் இயக்கவே விரும்புகிறேன் - இயக்குநர் டீகே
Published on

‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி’  படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.

நடிகராக அறிமுகமானது பற்றி?

நடிப்பது, இயக்குவதை விட கடினமாகவே இருந்தது. என்னை நடிகராக்கியதில் முழு பங்கும் இயக்குநர் பாலாஜி தரணிதரனையே சாரும். தொடர்ந்து நடிப்பதில் ஆர்வம் காட்டவிரும்பவில்லை. நண்பருக்காகவே ‘சீதக்காதி’ படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். தொடர்ந்து இயக்குவதில் தான் கவனம் செலுத்தி வருகிறேன். அதே சமயத்தில் பாலாஜி போன்ற என்னுடைய நண்பர்கள் அவர்களின் படத்தில் நடிக்க வாய்ப்பளித்தால் நடிப்பை தொடரலாம்.

காட்டேரி எப்படி வந்திருக்கிறது?

ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் என்னுடைய முதல் படம் காட்டேரி என்று கூட சொல்லலாம். இதனை சாதாரண ஹாரர் படமென்றோ, காமெடி கலந்த ஹாரர் படமென்றோ நினைத்துவிட வேண்டாம். அதையும் கடந்து ரசிகர்களை கவரக்கூடிய வித்தியாசமான அம்சம் ஒன்று படத்தில் இடம்பெற்றிருக்கிறது. படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

‘காட்டேரி’ படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார். #Katteri #Deekay

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com