கதாநாயகன்

த.முருகானந்த இயக்கத்தில் விஷ்ணு விஷால் - கேத்தரின் தெரசா - சூரி கலகலப்பூட்டும் ‘கதாநாயகன்’ படத்தின் முன்னோட்டம்.
கதாநாயகன்
Published on

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் விஷ்ணு விஷால் தயாரிக்கும் படம் ‘கதாநாயகன்’.

இதில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கிறார். இவர்களுடன் சூரி, சரண்யா, ஆனந்தராஜ்,அருள்தாஸ், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, மீராகிருஷ்ணன் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - ஜே.லக்ஷ்மன், இசை - ஷான்ரோல்டன், படத்தொகுப்பு - ஸ்ரீதரன், கலை - ஏ.கோபி ஆனந்த், சண்டை பயிற்சி - தளபதி தினேஷ், திலிப்சுப்பராயன், நடனம் - ஷோபி பவுல்ராஜ், எம்.ஷெரிப், தயாரிப்பு - விஷ்ணு விஷால், ரஜினி நட்ராஜ், இயக்கம் - த.முருகானந்தம்.

படம் பற்றி கூறிய இயக்குனர்...

“நகைச் சுவை கலந்த படம் ‘கதாநாயகன்’. இது பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. எங்கள் குழுவினர் அனைவரும் சிரித்தபடி மகிழ்ச்சயுடன் பணியாற்றினோம். அனைவரும் ரசிக்கும் படமாக இது இருக்கும். விஷ்ணு விஷால் நல்ல நடிகர் மட்டுமல்ல. சிறந்த தயாரிப்பாளர்” என்றார்.

விஷ்ணு விஷால், “‘வெண்ணிலா கபடி குழு’ படம் நல்ல பெயரை பெற்று தந்த போதிலும் அடுத்தடுத்த படங்கள் சற்று சறுக்கல்களை தந்தன. கடைசியாக எனது தயாரிப்பில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. அதேபோன்று ஒரு தரமான படமாக ‘கதாநாயகன்’ படம் வந்துள்ளது” என்று கூறினார்.

‘கதாநாயகன்’ படத்தின் இசை, டிரைலர் சென்னையில் வெளியிடப்பட்டது. நிகழ்ச்சியில் சரண்யா, ஆனந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com