படப்பிடிப்பின் போது காயத்தை பொருட்படுத்தாமல் நடித்தார் அஜித்: கருணாகரன்

`விவேகம்' படப்பிடிப்பின் போது நடிகர் அஜித் தனக்கு ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாமல் நடித்துக் கொடுத்ததாக காமெடி நடிகர் கருணாகரன் கூறினார்.
படப்பிடிப்பின் போது காயத்தை பொருட்படுத்தாமல் நடித்தார் அஜித்: கருணாகரன்
Published on

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே ரிலீசாக இருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தில் ஏ.பி.எஸ். என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் காமெடி நடிகர் கருணாகரன் அஜித்துடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியதாவது,

மூன்று கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்டதாகவும், அதில் மொழிபெயர்பாளராக அவர் நடித்திருப்பதாகவும் கூறினார். மேலும் அவரது பெரும்பாலான காட்சிகள் அஜித் உடன் தான் என்றும் அவர் கூறியிருக்கிறார். முதலில் அஜித் சாருடன் நடிக்கும் போது பதட்டமாக இருந்ததாகவும், அஜித் மற்றும் இயக்குநர் சிவா அளித்த உத்வேகத்தினால் அடுத்தடுத்த காட்சிகளில் சிறப்பாக நடித்ததாகவும் கூறினார். ஒரு காட்சியில் நடிக்கும் போது அஜித்துக்கு காயம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் நடித்து அசத்தினார். வெற்றியின் ஒளிப்பதிவில் காட்சிகள் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

இவ்வாறு கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com