கரு படக்குழுவின் முக்கிய அப்டேட்

விஜய் இயக்கத்தில் நாக சவுரியா - சாய் பல்லவி நடிப்பில் உருவாகியிருக்கும் `கரு' படத்தின் முக்கிய தகவல் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளர். #Karu #SaiPallavi
கரு படக்குழுவின் முக்கிய அப்டேட்
Published on

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் உருவாகியிருக்கும் படம் `கரு'.

விஜய் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சாய் பல்லவி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாக சவுரியா, வெரோனிகா அரோரா, கந்தாரி நிதின், ஆர்.ஜே.பாலாஜி, சந்தான பாரதி, ரேகா, நிழல்கள் ரவி, ஸ்டன்ட் சில்வா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

பெண்கள் மற்றும் பெண்மையின் முக்கியத்துவத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி இருக்கிறது. சாம்.சி.எஸ். இசையமைத்திருக்கும் இந்த படத்தின் இசை நாளை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அந்தோணி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சமீபத்தில் வெளியான `கரு' படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கிடைத்திருக்கும் நிலையில், படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. #Karu #SaiPallavi

X

Maalai Malar
www.maalaimalar.com