விக்னேஷ் சிவனை பாராட்டிய பாலிவுட் இயக்குனர்

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படத்தை இயக்க உள்ள விக்னேஷ் சிவனை, பாலிவுட் இயக்குனர் ஒருவர் பாராட்டியுள்ளார்.
விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன்
Published on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான நானும் ரவுடி தான் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக நயன்தாராவும் நடித்திருந்தார். இதே கூட்டணி ஐந்து ஆண்டு இடைவேளைக்கு பின் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ எனும் படம் மூலம் மீண்டும் இணைந்துள்ளது. 

செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ள இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்க உள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

காதலர் தினத்தன்று இப்படத்தின் தலைப்பை புதுமையான முறையில் படக்குழுவினர் அறிவித்தனர். அனிருத்தின் துள்ளலான இசையுடன் கூடிய அந்த வீடியோ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. 

இந்நிலையில், பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் கரண் ஜோகர் இந்த வீடியோவை வியந்து பாராட்டியுள்ளார். மிகவும் புதுமையான முறையில் இந்த வீடியோ இருந்ததாக படக்குழுவினருக்கு கரண் ஜோகர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com