கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படக்குழுவில் இணைந்த டிவி பிரபலம்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் தொலைக்காட்சி பிரபலம் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. #KKK #Dulquer
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படக்குழுவில் இணைந்த டிவி பிரபலம்
Published on

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் துல்கர் சல்மான், தற்போது தமிழில் `கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் நடித்து வருகிறார். 

தேசிங்கு பெரியசாமி இயக்கும் இந்த படத்தில் துல்கர் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். இந்த நிலையில், இந்த படத்தில் நடிக்கும் மற்றொரு கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமான வீடியோ ஜாக்கி ரக்‌ஷன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் துல்கர் அவரது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார். 

துல்கர் சல்மானின் 25-வது படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

எஃப்.டி.எஸ் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. #KKK #Dulquer

X

Maalai Malar
www.maalaimalar.com