கன்னி ராசி

கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில், விமல் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார்.
கன்னி ராசி
Published on

கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி.‌ஷமீம் இப்ராகிம் தயாரிக்கும் படம் ‘கன்னி ராசி’.

இதில், விமல் நாயகனாக நடிக்கிறார். அவருடைய ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கிறார்கள். நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படம் தயாராகிறது.

ஒளிப்பதிவு-எஸ்.செல்வகுமார், இசை- விஷால் சந்திரசேகர், படத்தொகுப்பு- ராஜா முகமது, பாடல்கள்- யுகபாரதி, நடனம்-கலா, விஜி. தயாரிப்பு- பி.‌ஷமீம் இப்ராகிம், இயக்கம்-எஸ்.முத்துக்குமரன். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டபோது....

“படத்தில் கதாநாயகன் விமல் குடும்பத்தினர் அனைவருக்கும் கன்னி ராசி. எல்லோருமே காதல் திருமணம் செய்து கொண் டவர்கள். ஆனால் விமல், பெற்றோர்கள் நிச்சயிக்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்து கொள்வது என்ற லட்சியத்துடன் இருக்கிறார். இந்த நிலையில் விமல் வீட்டின் எதிர் வீட்டிற்கு வரலட்சுமி குடும்பத்தினர் குடி வருகிறார்கள். இரண்டு குடும்பத்தினரும் சந்தித்து கொள்ளும் போது என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறோம்.

இதில், விமலும், வரலட்சுமியும் முதன் முறையாக இணைந்து நடிக்கின்றனர். படம் முழுவதும் விமலும், வரலட்சுமியும் இடம் பெறும் காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் மக்களின் பேராதரவைப் பெறுவது நிச்சயம்.” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com