தீவிர பரத நாட்டிய பயிற்சியில் கங்கனா

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்திற்காக நடிகை கங்கனா ரனாவத் தீவிரமாக பரத நாட்டியம் பயிற்சி பெற்று வருகிறார்.
கங்கனா
கங்கனா
Published on

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கான தலைவி படத்தில் அரவிந்த்சாமி எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடம் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகின. விஜய்யின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் முன்னரே அறிவித்தபடி தலைவி என்ற பெயரில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பயோபிக்கை இயக்க உள்ளார். இப்படத்திற்கு பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத் ஜெயலலிதா பாத்திரத்தை ஏற்கவுள்ளார். கங்கனா தனது தலைவி படத்திற்காக தனது பயிற்சிகளை தொடங்கியுள்ளார். தமிழ் மொழி உச்சரிப்புக்காக பயற்சி பெற்று வரும் அவர், பரத நாட்டியம் பயிற்சியிலும் ஈடுபடவுள்ளார்.

இப்படத்தில் பரத நாட்டியம் முக்கியமான பங்குவகிக்க உள்ளது. இந்நிலையில், ஜெயலலிதாவின் வாழ்வில் முக்கிய பங்குவகித்த மறைந்த முன்னாள் முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் பாத்திரத்தில் யார் நடிக்கவுள்ளார் என கேள்விகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. தற்போது எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த் சாமி ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com