தன் படத்தை நிராகரித்த பி.சி.ஸ்ரீராமுக்கு கங்கனா பதிலடி

தன் படத்தை நிராகரித்து விட்டதாக பி.சி. ஸ்ரீராம் டுவிட் செய்த நிலையில், நடிகை கங்கனா ரணாவத் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
பி.சி. ஸ்ரீராம், கங்கனா ரணாவத்
பி.சி. ஸ்ரீராம், கங்கனா ரணாவத்
Published on

இந்திய சினிமா உலகில் மிகவும் பிரபலமானவர் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். தமிழில் பல முன்னணி இயக்குனர்கள் படங்களில் பணியாற்றி இருக்கிறார். 

அவர் நேற்று வெளியிட்ட டுவிட்டர் பதிவு மிகவும் வைரலாக பரவியது.  அந்த பதிவில், ‘கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடிக்கும் படத்தை நான் நிராகரித்து விட்டேன். எனது நிலைப்பாட்டை தயாரிப்பாளர்களுக்கு விளக்கினேன். அவர்களும் புரிந்து கொண்டார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், பி.சி.ஸ்ரீராம் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக கங்கனா ரணாவத் கூறியிருப்பதாவது: "உங்களைப் போன்ற லெஜண்டுடன் பணிபுரியும் வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன் சார். இது முற்றிலும் என்னுடைய இழப்புதான். என்னைப் பற்றி உங்களுக்கு சங்கடமான எண்ணம் ஏற்பட என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சரியான வழியைத் தேர்ந்தெடுத்தீர்கள் என்பதில் மகிழ்ச்சி. உங்களுக்கு வாழ்த்துகள்" என கங்கனா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com