சமூக வலைத்தளங்களை வெறுக்கும் கங்கனா ரணாவத்

மற்ற நடிகர் - நடிகைகளைப்போல் சமூக வலைத்தளங்களில் புழங்க தனக்கு ஆர்வம் இல்லை என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
சமூக வலைத்தளங்களை வெறுக்கும் கங்கனா ரணாவத்
Published on

ஆனால் இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு சமூக வலைத்தளங்கள் என்றாலே அலர்ஜியாம். எப்போதும் அதில் இருந்து தள்ளியே இருக்கிறார். இதுகுறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது:-

“மற்ற நடிகர்-நடிகைகளைப்போல் சமூக வலைத்தளங்களில் புழங்க எனக்கு ஆர்வம் இல்லை. அவை நமது நேரத்தை விரயம் செய்கின்றன என்பது எனது கருத்து. அதில் செலவிடும் நேரத்தை வேறு நல்ல விஷயங்களுக்கு ஒதுக்கலாம். நிறைய பேர் சமூக வலைத்தளத்தில் ஒரு அக்கவுண்ட் வைத்துக்கொள்ளுங்கள் என்று என்னிடம் வற்புறுத்தினர். நான் ஏற்கவில்லை.

நான் விளம்பர தூதுவராக இருக்கும் சில நிறுவனங்கள் சமூக வலைத்தளத்தில் நீங்கள் இருந்தால் எங்கள் பொருட்களை மக்களிடம் கொண்டு செல்ல உதவியாக இருக்கும் என்றனர். அதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் சிலர் நீங்கள் கணக்கு மட்டும் தொடங்குங்கள். நாங்கள் அவற்றில் உங்களை பற்றிய செய்திகளை பதிவிடுகிறோம் என்றனர். மக்களுக்கு என்பெயரால் அப்படி ஒரு மோசடி நடப்பதை நான் விரும்பாததால் அதற்கும் சம்மதிக்கவில்லை.”

X

Maalai Malar
www.maalaimalar.com