காஞ்சனா 3 திரைப்படம் 10 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா

லாரன்ஸ் நடித்து இயக்கிய ‘காஞ்சனா 3’ திரைப்படம் பத்து நாட்களில் பல கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #Kanchana3
காஞ்சனா 3 திரைப்படம் 10 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா
Published on

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘காஞ்சனா 3’. இதில் `முனி' படத்தில் லாரன்ஸ் ஜோடியாக நடித்த வேதிகா, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஓவியா நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் நிகிதா, கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, கபீர் சிங், சூரி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இப்படம் ஏப்ரம் 19ம் தேதி வெளியானது. திகில் கலந்து வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. 

இந்த படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளி குவித்துக் கொண்டிருக்கிறது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 130 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com