ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் `கனா' படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. #Kanaa #AishwaryaRajesh
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் கனா படத்தின் ரிலீஸ் அறிவிப்பு
Published on

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக அறிமுகமாகும் படம் `கனா'. நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை கொண்ட அருண்ராஜா காமராஜ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கிரிக்கெட் வீராங்கணையாக நடித்திருக்கிறார். அவரது அப்பாவாக சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், படத்தை வருகிற டிசம்பரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே வெளியான படத்தின் இசை மற்றும் டீசருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. திபு நிணன் தாமஸ் இசையமைத்திருக்கம் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர், தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி படம் உருவாகி இருக்கிறது. மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. #Kanaa #AishwaryaRajesh

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com