சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் கமல்ஹாசன்

பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ’சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் கமல்ஹாசனும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளதாக சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசன்
Published on

சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் சிரஞ்சீவி, அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்தப் படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் சிரஞ்சீவி, ராம் சரண், தமன்னா உள்ளிட்டோருடன் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும் கலந்து கொண்டார்கள். 

இந்த விழாவில் சிரஞ்சீவி பேசும் போது, ”என் நண்பர் கமல்ஹாசன் சைரா படத்தின் தமிழ் பதிப்பிற்கு அறிமுக காட்சிக்கு பின்னணிக் குரல் கொடுத்துள்ளார். இந்த காட்சிக்கு தெலுங்கில் பவன் கல்யாண் குரல் கொடுத்துள்ளார். மலையாளத்தில் மோகன் லால் குரல் கொடுத்திருக்கிறார். தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுக்குமாறு நான் அணுகிய உடனே சம்மதம் தெரிவித்தார் கமல்ஹாசன். அவருக்கு நன்றி” எனக் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com