கமல் கட்சியில் சேர இணையதளம் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பம்

மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் கமல்ஹாசனின் கட்சியில் இணைய இணையதளம் வழியாக சுமார் 2 லட்சம் பேர் இணைந்திருக்கின்றனர். #MakkalNeethiMaiam #KamalHaasan
கமல் கட்சியில் சேர இணையதளம் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பம்
Published on

கமல்ஹாசன் தொடங்கி உள்ள புதிய கட்சிக்கு ஷ்ஷ்ஷ்.னீணீவீணீனீ.நீஷீனீ எனற அதிகாரப்பூர்வ இணையதளம் ஏற்கனவே தொடங்கப்பட்டிருந்தது.

தனது கட்சியில் சேர விரும்புபவர்கள் இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கமல் அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் கமலின் புதிய கட்சியில் உறுப்பினர்களாக சேர விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா, சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா, சவுதிஅரேபியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் வசிப்பவர்கள் மய்யம் இணையதளத்தை பார்வையிட்டு தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டுள்ளனர். மய்யம் இணையதளத்தை மொத்தம் 8½ லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

இணையதளம் மூலமாக கமல் கட்சியில் உறுப்பினராக சேருவதற்கு 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இது போன்று இணையதளம் மூலமாக இணைந்தவர்களுக்கு உறுப்பினருக்கான தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்காக தொடங்கப்பட்டுள்ள டுவிட்டர் பக்கத்தை 35 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

மதுரை பொதுக்கூட்ட வீடியோ, கமல் கட்சியின் பேஸ்புக் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த வீடியோவை 7 லட்சத்து 16 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். #MakkalNeethiMaiam #KamalHaasan

X

Maalai Malar
www.maalaimalar.com