அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி

அரசியல் வேறு, சினிமா வேறு. இதை குழப்பிக் கொள்ளக் கூடாது, இந்த இரு வி‌ஷயத்திலும் மற்றவர்கள் குழப்பம் அடைந்தால், அதற்கு நான் பொறுப்பு ஏற்க இயலாது என்று கமல்ஹாசன் கூறியிருக்கிறார். #KamalHaasan #Viswaroopam2
அரசியல் வேறு, சினிமா வேறு குழப்பம் செய்பவர்களுக்கு நான் பொறுப்பு அல்ல - கமல்ஹாசன் பேட்டி
Published on

அரசியல் வேறு, சினிமா வேறு என்று நடிகர் கமல்ஹாசன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

இதற்கு முன்பு எனது சில படங்களுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் திட்டமிட்டு என் படங்களுக்கு எதிர்ப்பை ஏற்படுத்தினார்கள். ஆனால் இப்போது அத்தகைய சூழ்நிலை இல்லை.

முன்பு விஸ்வரூபம் படத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் அரசியல் கலந்திருந்தது. இப்போதும் அதே மாதிரி அரசியல் கலக்குமானால் அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள நானும் தயாராக இருக்கிறேன். இதற்காக நான் என்னை தயார்படுத்தியுள்ளேன்.

விஸ்வரூபம் படத்தின் 2-வது பகுதி முதல் பகுதிக்கு தொடர்ச்சியாக உண்மையானதாக இருக்கும். வாசீம் முகம்மது காஷ்மீரி யார் என்பதை விஸ்வரூபம் இரண்டாம் பாகத்தில் தெளிவாக கூறியுள்ளோம்.

இந்த படத்தை நான் எனது அரசியல் பயணத்துக்கு எந்த விதத்திலும் பயன்படுத்தி கொள்ளவில்லை. ஒரு வேளை நான் படம் தயாரித்திருந்தால் அதை செய்திருப்பேன். ஆனால் இதில் நான் அரசியல் செய்யவில்லை.

என்னைப் பொறுத்தவரை அரசியல் வேறு, சினிமா வேறு. இதை குழப்பிக் கொள்ளக் கூடாது. இந்த இரு வி‌ஷயத்திலும் மற்றவர்கள் குழப்பம் அடைந்தால், அதற்கு நான் பொறுப்பு ஏற்க இயலாது.

இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #Viswaroopam2

X

Maalai Malar
www.maalaimalar.com