கூத்துப்பட்டறை முத்துசாமி மறைவுக்கு கமல் இரங்கல்

கூத்துப்பட்டறை நிறுவனர் நா.முத்துசாமி மறைவுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். #Kamal #NaMuthuswamy
கூத்துப்பட்டறை முத்துசாமி மறைவுக்கு கமல் இரங்கல்
Published on

சினிமா உலகில் நடிகர், நடிகைகள் பலரை உருவாக்கிய கூத்துப்பட்டறையை நிறுவிய நா.முத்துசாமி (82) உடல்நலக்குறைவால் இன்று காலாமானார்.

பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் தஞ்சாவூர் மாவட்டம் புஞ்சை கிராமத்தை சேர்ந்தவர். விஜய் சேதுபதி, பசுபதி, விமல் உள்ளிட்ட பல நடிகர்கள் இவரது கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள் ஆவர். 

தெருக்கூத்து மூலம் பிரபலமான இவர் கூத்துப்பட்டறை மூலம் நடிகர்களுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வந்தார். மேலும் `வாழ்த்துக்கள்' என்ற படத்திலும் நடித்திருக்கிறார். 

முத்துசாமி மறைவுக்கு சினிமா பிரபலங்கள், முக்கிய தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கமல் இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சில தனி மனிதனின் இழப்பை, ஒரு தலைமுறைத்தான் ஈடுசெய்ய வேண்டும். அப்படி இணையற்ற சாதனையாளர் நா.முத்துசாமி. அவரிடம் பயிற்சி பெற்று நிறைய நடிகர்கள் சினிமாவிற்கு வந்திருக்கிறார்கள். அவர் இருந்தபோது செய்த கடமைக்கு ஒரு கலைஞனாக நன்றி’ என்று கூறியிருக்கிறார். #Koothuppattarai #NaMuthuswamy

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com