முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன் புதிய கருத்து

முந்திச் செல்வதை விட, முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை என நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கம் மூலம் புதிய கருத்தை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முந்தி செல்வதை விட முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை: கமல்ஹாசன் புதிய கருத்து
Published on

ஊழல் குறித்து கமல்ஹாசன் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அனைத்து துறைகளிலும் ஊழல் நடந்து இருப்பதாக விமர்சித்து இருந்தார்.

இதற்கு அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர். கமல்ஹாசன் பற்றி விமர்சித்தனர். ஆதாரம் இல்லால் குறை சொல்லக்கூடாது என்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஊழல் ஆதாரங்களை திரட்டி அமைச்சர்களின் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பும்படி அவரது ரசிகர்களுக்கு கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இந்த நிலையில் இணையதளத்தில் அமைச்சர்களின் இ-மெயில் முகவரிகள் மாயம் ஆகின. இதையடுத்து ஊழல் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரகத்துக்கு அனுப்பும்படி கமல் அறிவுறுத்தினர். இதையடுத்து அவரது ரசிகர்கள் ஊழல் தொடர்பான ஆதாரங்களை திரட்டி அனுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு அங்கன் வாடி மையத்தில் அழுகிய முட்டை வழங்கப்பட்ட தாகவும் இதற்கு காரணம் ஊழல் என்றும் கமல் ரசிகர்கள் குற்றம் சாட்டினார்கள். கலெக்டர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருக்கும் கமல்ஹாசன், “பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல் இயக்கத்துக்கு பெருமையே எனினும் இயக்க தோழர்கள் வக்கீல்களின் ஆலோசனைபடி செயல்படவும்” என்று அதில் கூறிப்பிட்டுள்ளார்.

இது போன்று பல்வேறு கருத்துக்களை கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி வருகிறார். சமீபத்தில் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘என் பிரகடனத்தில் பிழை இருக்கிறதாம். எல்லா ஊழல் களையும் சாராத பிழை. கட்சி நட்பு குடும்ப வேதம் இன்றி, எவ்வகை ஊழலையும் களைய முயல்வதே என் கடமை. உமதும்’ என்று கூறி இருந்தார்.

இப்போது தனது டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் புதிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

‘டாக்டர். நீர் சொன்னீர் வழி மொழிகிறேன். முந்திச் செல்வதை விட, முன்னேற்றத்தின் பின் செல்வதே பெருமை. பின்பற்றுவேன். தொண்டர் அல்லர் மக்கள், குடியரசு புரிந்ததா?

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com