இணையத்தில் வைரலான கமலின் புது கெட்-அப்

தாடி, மீசை இல்லாமல் வலம் வந்த நடிகர் கமல்ஹாசன், தற்போது மீசை வைத்து புது கெட் - அப்பில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
இணையத்தில் வைரலான கமலின் புது கெட்-அப்
Published on

கமல்ஹாசன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதில் கவனமாக இருப்பார். கதையின் பாத்திரத்துக்கு தகுந்தபடி உடல் எடையை கூட்டுவார். குறைப்பார். ‘கெட்-அப்’-ஐ மாற்றுவார்.

கமல் அரசியலுக்கு வந்த பிறகு தாடி, மீசை இல்லாத சாதாரண தோற்றத்துக்கு மாறினார். இந்த நிலையில் ஈரோடு சுற்றுப் பயணத்தின் போது லேசான தாடி-மீசையுடன் காணப்பட்டார். இப்போது பெரிய மீசையுடன் காட்சி அளிக்கிறார். இதைப் பார்க்கும் போது ‘தேவர் மகன்’ கெட்-அப் போல் இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

மீசைக்கு மாறிய கமலின் புதிய தோற்றத்துடன் உள்ள புகைப்படம் வேகமாக இணைய தளங்களில் பரவி வருகிறது. கமலின் ‘விஸ்வரூபம்-2’ படம் திரைக்கு வர தயாராக உள்ளது. அடுத்து ‘இந்தியன்-2’ படத்தில் ‌ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். 

இதற்காகத்தான் மீசையை பெரிதாக வளர்த்து இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இது உண்மையா என்பது குறித்து கமல் தரப்பிலோ, ‌ஷங்கர் தரப்பிலோ எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை இல்லை. என்றாலும், ரசிகர்களும், கமல் ஆதரவாளர்களும் அவருக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com