விஸ்வரூபம் 3 வருமா? கமல் பதில்

கமல் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இதன் 3ம் பாகம் வெளியாகுமா என்பதற்கு விளக்கம் அளித்துள்ளார். #Kamal
விஸ்வரூபம் 3 வருமா? கமல் பதில்
Published on

விஸ்வரூபம் 2 படத்தில் கமலும் ஆண்ட்ரியாவும் ரா அமைப்பில் பயிற்சி பெறும் காட்சிகள் சென்னை கிண்டியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் படமாக்கப்பட்டிருந்தது. அங்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்த கமல் காட்சி முடிந்ததும் பேசினார்.

அப்போது விஸ்வரூபம் 3 வருமா? என்று கேட்டதற்கு ‘சினிமாவில் இல்லை. நிஜத்தில் தான் விஸ்வரூபம் எடுக்க இருக்கிறேன்’ என்றார். மேலும் ‘இங்கு நான் பயிற்சி எடுத்த காலம் குறுகியது தான், ஆனால் கற்றுக்கொண்டது நிறைய. இந்திய ராணுவத்தில் நாம் அதிகம் பங்கெடுக்க வேண்டும் அது என்னுடைய ஆசை. பயிற்சியின் போது இடம்பெற்ற ராணுவ அதிகாரிகளும் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

படத்திற்காக பலமுறை பயிற்சி எடுத்து இருந்தால் கூட இந்த அளவிற்கு படம் வந்திருக்காது. ஆனால் இங்குள்ள உண்மையான ராணுவ வீரர்கள் உடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது. விஸ்வரூபம் 2 வெளியிடப்படாத மாவட்டங்களில் படம் நிச்சயமாக வெளியாகும். படத்தை தடைவிதிக்க பின்புலத்தில் இருந்து நிறைய பேர் வேலை செய்கிறார்கள் அவர்கள் யார் என்று நான் சொல்லமாட்டேன்.

எனவே நிச்சயம் இது சரி செய்யப்படும். படித்த இளைஞர்கள் அதிகாரிகளாக வர வேண்டும், இதுவும் அவர்கள் கடமையென நாடு காக்கும் பணியை செய்ய முன்வர வேண்டும். ஆனால் யாரையும் கட்டாயபடுத்தக்கூடாது. படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களை, எதிர்மறையாகவே பார்க்க வேண்டும், எதிர்கொள்ள வேண்டும்’ என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com