களவாணி மாப்பிள்ளை

காந்தி மணிவாசகம் இயக்கத்தில் தினேஷ் - அதிதி மேனன் நடிப்பில் காதல் கலந்த காமெடி படமாக உருவாகும் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் முன்னோட்டம்.
களவாணி மாப்பிள்ளை
Published on

நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்ட பொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 படங்களை தயாரித்துள்ள பட நிறுவனம் ராஜபுஷ்பா பிக்சர்ஸ்.

இதன் தயாரிப்பாளர் மணிவாசகம் இந்த படங்கள் அனைத்தையும் இயக்கினார். அவர் மறைந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படத்தயாரிப்பில் ராஜபுஷ்பா பிக்சர்ஸ் களமிறங்குகிறது.

இதன் சார்பில், மணிவாசகத்தின் மகன் காந்திமணி வாசகம் தயாரித்து, இயக்கும் படம். ‘களவாணி மாப்பிள்ளை’.

இதில் தினேஷ் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அதிதி மேனன் நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்த்ராஜ், தேவயானி, ரேணுகா, மனோபாலா, மகாநதி சங்கர், மொட்டை ராஜேந்திரன், முனீஸ்காந்த் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு - சரவணன் அபிமன்யு, இசை - என்.ஆர்.ரகுநந்தன், கலை - மாயாபாண்டி, எடிட்டிங் - பி.கே, நடனம் - தினேஷ், ஸ்டண்ட் - திலீப் சுப்ப ராயன், தயாரிப்பு - ராஜேஸ்வரி மணி வாசகம். கதை, திரைக்கதை, இயக்கம் காந்தி மணிவாசகம். படம் பற்றி அவரிடம் கேட்ட போது.... “ஜனரஞ்சகமான காமெடி, காதல் கதையாக ‘களவாணி மாப்பிள்ளை’ தயாராகிறது” என்றார்.

இந்த படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது. படப்பிடிப்பு 15-ம் தேதி பொள்ளாச்சியில் தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com