‘கலகலப்பு-2’ படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சுந்தர்.சி. இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கலகலப்பு-2’ படத்தின் தணிக்கைக் குழு சான்றிதழ் வெளியானதை அடுத்து படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘கலகலப்பு-2’ படத்தின் அதிகாரப்பூர்வ  ரிலீஸ் தேதி அறிவிப்பு
Published on

சுந்தர்.சி-யின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கலகலப்பு-2’. 

சுந்தர். சி இயக்கத்தில் ‘கலகலப்பு’ படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நந்திதா சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். சதீஷ், ரோபோ ஷங்கர், மனோ பாலா, விடிவி கணேஷ், வையாபுரி, சந்தான பாரதி, விச்சு உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். 

படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், பாடல்கள் விரைவில் வெளியாக இருப்பதாக குஷ்பு தெரிவித்திருக்கிறார். 

அவ்னி மூவி மேக்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு எந்தவித கட்டும் இன்றி தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. தணிக்கை சான்றிதழ் வெளியானதை அடுத்து படம் காதலர் தினத்தை முன்னிட்டு வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாக குஷ்பு அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். 

இந்த படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியிருக்கிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com