குதிரை வாலை எதிர்பார்த்து காத்திருக்கும் கலையரசன்

மெட்ராஸ் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்த கலையரசன், குதிரை வால் என்ற படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.
கலையரசன்
கலையரசன்
Published on

பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் கலையரசன். இப்படத்தை அடுத்து டார்லிங், கபாலி, அதே கண்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘குதிரை வால்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. 

இதில் கலையரசனுடன் காலா பட புகழ் அஞ்சலி பாட்டில் நடித்துள்ளார். இப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. குதிரைவால் திரைப்படம் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாக்கி இருக்கிறார்கள். சமீபத்தில் வெளியான இதன் டீசர் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது கலையரசனுக்கு முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுக இயக்குனர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். ராஜேஷ் கதை எழுதியிருக்கிறார். இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாக உருவாக்கி இருக்கும் படக்குழுவினர், படம் பார்ப்பவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தை தவிர பா.ரஞ்சித் இயக்கி வரும் சல்பெட்டா படத்திலும் கலையரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com