

நயன்தாரா மாயா, டோரா படங்களை தொடர்ந்து புதிதாக பேய் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை லக்ஷ்மி, மா உள்ளிட்ட குறும்படங்களை இயக்கிய சர்ஜுன் இயக்குகிறார். இந்த படத்தில் நடிகர் கலையரசனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பது தெரிய வந்துள்ளது.
அவர் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக பேய் பங்களா செட் ஒன்றையும் படக்குழுவினர் சென்னையில் அமைத்து வருகின்றனர்.
தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் நயன்தாரா, அதைத் தொடர்ந்து 25 நாட்களுக்கு அந்த பேய் பங்களாவில் நடக்கும் காட்சிகளில் நடிக்க உள்ளார். அதன் பிறகு கடைசி கட்ட படப்பிடிப்புக்காக பொள்ளாச்சி செல்ல உள்ளனர். #Nayanthara #Kalaiyarasan