காலா நடிகையுடன் கூட்டணி அமைத்த கலையரசன்

மெட்ராஸ் படம் மூலம் பிரபலமான நடிகர் கலையரசன், தற்போது ரஜினியின் காலா பட நடிகையுடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.
கலையரசன்
கலையரசன்
Published on

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கலையரசன். இவர் தற்போது குதிரைவால் என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் இவருடன் காலா படத்தில் புரட்சி பெண்ணாக நடித்த அஞ்சலி பாட்டீல் நடித்திருக்கிறார். 

வழக்கமான சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் - ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். படத்துக்கான கதையை ராஜேஷ் எழுதியிருக்கிறார். பிரதீப் மற்றும் மார்டின் விசர் இசையமைத்திருக்கிறார்கள். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

யாழி பிலிம்ஸ் சார்பில் விக்னேஷ் சுந்தரேசன் தயாரித்திருக்கும் இப்படத்தை இப்படத்தை நீலம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் வெளியிட இருக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com