மகேந்திரன் பட டிரைலரை வெளியிட்ட கலைப்புலி தாணு

வீரசெல்வா இயக்கத்தில் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘நாடோடி கனவு’ படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை கலைப்புலி தாணு வெளியிட்டிருக்கிறார். #NadodiKanavu
மகேந்திரன் பட டிரைலரை வெளியிட்ட கலைப்புலி தாணு
Published on

குழந்தை நட்சத்திரமாக ரசிகர்களை கவர்ந்து, தற்போது இளம் நடிகராக வலம் வரும் மகேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘நாடோடி கனவு’. இதில் மகேந்திரனுக்கு ஜோடியாக சுரபி நடித்துள்ளார். மேலும் கிரேன் மனோகர், விஜய் கணேஷ் மற்றும் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

ஆர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு சபேஷ் முரளி இசையமைத்துள்ளார். வீரசெல்வா இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு இன்று வெளியிட்டார். இவருடன் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். வித்தியாசமான திரைக்கதைக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com