பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு மிக மிக அவசரம் : கலைப்புலி தாணு பாராட்டு

சுரேஷ் காமாட்சியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் முதல் படமான மிக மிக அவசரம் படம் பார்த்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு மனம் நெகிழ்ந்து பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பு மிக மிக அவசரம் : கலைப்புலி தாணு பாராட்டு
Published on

பெண் போலீசார் பிரச்சினைகளை அலசும், அதேநேரம் பக்கா கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது மிக மிக அவசரம்.

இந்தப் படம் குறித்து திரையுலகில் ஏற்கெனவே நல்ல 'டாக்' உள்ள நிலையில், படத்தின் சிறப்புக் காட்சியை தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்தார் இயக்குநர் சுரேஷ் காமாட்சி.

படம் பார்த்து முடித்ததும் இயக்குநர் சுரேஷ் காமாட்சியையும், நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்களையும் வெகுவாகப் பாராட்டினார் கலைப்புலி தாணு.

தான் முற்றிலும் எதிர்ப்பார்க்காத புதுமைப் படைப்பு இது. மிகவும் பெருமைக்குரிய படம் என்று கலைப்புலி தாணு தெரிவித்தார்.

பின்னர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெண்மைக்கு பெருமை சேர்க்கும் உயரிய படைப்பாக தம்பி சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மிக மிக அவசரம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்," என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com