ஜெயம் ரவிக்கு வில்லனாகும் நானா படேகர்

அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தில் நானா படேகர் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நானா படேகர், ஜெயம் ரவி
நானா படேகர், ஜெயம் ரவி
Published on

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படம் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இப்படத்திற்கு ’ஜன கன மன’ என பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டாப்சி கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஈரானிய நடிகை எல்நாஸ் நொரோஷி, ஆக்சன் கிங் அர்ஜுன், கேஜிஎப் வில்லன் ராம், மற்றும் நடிகை டயானா எரப்பா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தில் பிரபல நடிகர் நானா படேகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் ஏற்கனவே ரஞ்சித் இயக்கிய காலா படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார்.  

X

Maalai Malar
www.maalaimalar.com