காஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி நாயகியான காஜல் அகர்வால் படப்பிடிப்பு தளத்தில் பாதுகாப்பான முறையில் ஆடிய ‘கிகி’ நடன வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. #KiKiChallenge #KajalAggarwal
காஜல் அகர்வால் போல் கிகி நடனம் ஆடலாமாம் - வைரலாகும் வீடியோ
Published on

‘கிகி’ நடனம் சவால் வீடியோக்களால் விபத்துக்கள் ஏற்படுவதால், யாரும் ‘கிகி’ நடனம் ஆட வேண்டாம் என்று இந்தியா முழுவதும் போலீசார் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மீறி ‘கிகி’ நடனம் ஆடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

ஆனாலும் எதிர்ப்பை மீறி பலர் ஓடும் காரில் இருந்து குதித்து, கிகி நடனம் ஆடி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். 

ரெஜினா கசாண்ட்ரா, இந்தி நடிகைகள் அடாசர்மா, நோரா, நியா, கரிஷ்மா ஆகியோரும் கிகி நடன வீடியோக்களை வெளியிட்டு உள்ளனர். இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வால் ஓடும் காரை தவிர்த்து, பாதுகாப்பாக கிகி நடனம் ஆடும் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டு இருக்கிறார். காஜல் அகர்வாலும் பெல்லம் கொண்ட சாய் சீனிவாசும் தெலுங்கு படமொன்றில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பில் இருவரும், நிறுத்தி வைத்திருந்த காரின் முன்னால் சக்கர நாற்காலியில் இருந்து கீழே இறங்கி ‘கிகி டூ யூ லவ் மீ’ பாடலுக்கு நடனம் ஆடினர். அந்த வீடியோவை காஜல் அகர்வால் வெளியிட்டு ‘தாமதமாகத்தான் இந்த நடனத்தில் நாங்களும் இணைகிறோம். இப்படியும் பாதுகாப்பாக கிகி நடனம் ஆட முடியும்’ என்று ஆலோசனை கூறியிருக்கிறார். அவரது பாதுகாப்பான கிகி நடனத்தை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். #KiKiChallenge #KajalAggarwal

X

Maalai Malar
www.maalaimalar.com