இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், இந்த முறை அந்த நடிகருடன் ஜோடி சேர்ந்தே ஆவேன் என்று திட்டவட்டமாக இருக்கிறார். #KajalAggarwal
இந்த முறை விடமாட்டேன் - காஜல் அகர்வால் திட்டவட்டம்
Published on

மும்பை அழகியான காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இந்தித் திரைப்படமான ‘கியூன் ஹோ கயா நா’வில் 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராயின் தோழியாக அறிமுகமானார்.

பின்னர் தெலுங்கில் ‘லட்சுமி கல்யாணம்’ என்ற படத்திலும், தமிழில் ‘பழனி’ என்ற படத்திலும் நடித்தார். ராஜ மவுலி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘மகதீரா’ திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

அதிலிருந்து இப்போது வரை அவருக்கான கிரேஸ் குறையாமல் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.

பத்து வருடங்களில் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் காஜல். இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் ஒரு சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க முடியாததால் அவருக்குப் பதிலாக ஹன்சிகா நடித்தார். தற்போது புதிய படம் மூலம் ஜெயம் ரவியுடன் இணைய இருக்கிறார் காஜல் அகர்வால்.

ஜெயம் ரவி அடுத்து தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தில் நடிக்கிறார். தனி ஒருவன் வெளியாகி 3 ஆண்டுகள் முடிவடைவதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com