சவால்களை எதிர்நோக்கும் காஜல் அகர்வால்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கவிருக்கும் காஜல் அகர்வால், சவால்களை ஏற்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். #KajalAggarwal #Indian2
சவால்களை எதிர்நோக்கும் காஜல் அகர்வால்
Published on

காஜல் அகர்வால் இந்தியன் 2 படத்துக்காக கமலுடன் இணைந்ததில் மகிழ்ச்சியாக உள்ளார். அவர் அளித்த பேட்டி:

தெலுங்கில் வெளியாக இருக்கும் கவச்சம் படத்தில் என்ன வேடம்?

நான் கவச்சம் படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஹீரோ வந்து காப்பாற்றும் ஹீரோயினாகவே வழக்கமாக நடித்துள்ளேன். மக்கள் ஏன் என்னை அப்படிப்பட்ட கதாபாத்திரத்தில் பார்க்க விரும்புகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால் கவச்சம் படத்தில் ஹீரோ யாரை காப்பாற்றுகிறார் என்பதை திரையில் பாருங்கள்.

இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர தொடங்கி இருக்கிறீர்களே?

முன்பு சீனியர்களுடன் நடித்த நான் தற்போது இளம் ஹீரோக்களுடன் ஜோடி சேர்வது திட்டமிட்ட செயல் அல்ல. அதுவாக நடக்கிறது. நான் கதைக்கு தான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன். ஒரே மாதிரி நடித்து நடித்து போர் அடித்துவிட்டது. இனி அப்படி செய்ய விரும்பவில்லை. கவச்சம் ஒரு கமர்ஷியல் படம். சில நேரங்களில் கமர்ஷியல் காரணங்களுக்காகவும் சில படங்களில் நடிக்க வேண்டும்.

வெப் சீரீஸ்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?

வெப்சீரீஸ்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் அதில் நடிக்க தயாராக இல்லை. புது வி‌ஷயத்தை செய்ய நான் அப்போது மனதளவில் தயாராக இல்லை. கொஞ்சம் பயந்தேன் என்று கூட கூறலாம். ஆனால் தற்போது நான் துணிந்துவிட்டேன். புதுப்புது வி‌ஷயங்களை செய்ய விரும்புகிறேன். சவால்களை ஏற்க தயாராக உள்ளேன்.

இடையில் உங்களை பிடிக்கவே முடியவில்லையே?

இந்த ஆண்டு கேரியர் ரீதியாக எனக்கு நல்ல ஆண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் அப்படி இல்லை. இந்த ஆண்டின் துவக்கத்தில் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு 3 மாதங்கள் ஓய்வில் இருந்தேன். பிரேக் எடுக்க நினைத்தேன். கையில் உள்ள படங்களை மட்டும் முடித்துவிட்டு புதுப்படங்களை ஏற்க வேண்டாம் என்று நினைத்தேன். எனக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை எடுத்தேன். மாலை நேரம் வந்துவிட்டால் காய்ச்சல் வரும், மிகவும் சோர்வாகிவிடுவேன். மருத்துவரிடம் சென்றபோது தான் எனக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. நான் பிரேக் எடுக்க நினைத்தும் முடியவில்லை. அடுத்தடுத்த படங்களில் புக் ஆகிவிட்டேன். தற்போது குணமாகிவிட்டேன். #KajalAggarwal #Indian2

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com