அமலாபாலின் அதோ அந்த பறவையை அறிமுகம் செய்த காஜல் அகர்வால்

கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாக இருக்கும் `அதோ அந்த பறவை போல' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் வெளியிட்டிருக்கிறார். #AdhoAnthaParavai
அமலாபாலின் அதோ அந்த பறவையை அறிமுகம் செய்த காஜல் அகர்வால்
Published on

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிக்கும் படம் `அதோ அந்த பறவை போல'.

கே.ஆர்.வினோத் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகிகக்கு முக்கியத்துவம் உள்ள படமாக உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியானது. 

அந்த போஸ்டரை அமலா பாலின் தோழியும், நடிகையுமான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். இதுகுறித்து காஜல் அவரது டுவிட்டர் பக்கத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்டு தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கும் இந்த படத்திற்கு சாந்தகுமார் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஜே.ஆர். ஜான் ஆபரகாமும், கலை பணிகளை சரவணனும் மேற்கொள்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. #AdhoAnthaParavaiPola #AmalaPaul

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com