அடுத்தடுத்து தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் காஜல் அகர்வால்

பாரிஸ் பாரிஸ் படத்தை தொடர்ந்து அடுத்ததாக காஜல் அகர்வால் இரண்டு புதிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #KajalAgarwal
அடுத்தடுத்து தெலுங்கு ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் காஜல் அகர்வால்
Published on

காஜல் அகர்வாலின் சினிமா வாழ்க்கையில் இது 10ம் ஆண்டு. இதுவரை கதாநாயகர்களுக்கு ஜோடியாக மட்டுமே நடித்தவர் பாரிஸ் பாரிஸ் படம் மூலம் தனி கதாநாயகியாகவும் மாறி இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நடித்து வரும் காஜல் அடுத்தடுத்து 2 தெலுங்கு படங்களில் நடிக்க இருக்கிறார்.ராணா நடித்த நேனே ராஜு நேனே மந்திரி படத்தை இயக்கிய தேஜா இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத்தில் தொடங்கியது. பெல்லம் கொண்டா ஸ்ரீனிவாஸ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக காஜல் நடிக்க உள்ளார். 

இது தவிர சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தில் இரு கதாநாயகிகளில் ஒருவராக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com