ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்

காஜல் அகர்வாலை சந்தோஷத்தில் ஆழ்த்திய ரசிகர்களுக்கு, முத்தம் கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். #KajalAgarwal
ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய காஜல் அகர்வால்
Published on

காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களுடன் சமூக வலைத் தளங்களான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகியவை மூலம் தொடர்பில் இருக்கிறார். இதில் தனது புகைப்படம், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். 

இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் காஜலை தொடரும் ரசிகர்கள் எண்ணிக்கை 71 லட்சத்தை கடந்து இருக்கிறது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைத்து ரசிகர்களுக்கும் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார்.

தற்போது காஜல் அகர்வால் நடிப்பில் ‘பாரீஸ் பாரீஸ்’ திரைப்படம் உருவாகி வருகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com