காவியன்

சாரதி இயக்கத்தில் ஷாம் - ஆத்மியா - ஸ்ரீதேவி குமார் நடிப்பில் ஹாலிவுட் தரத்தில் உருவாகி இருக்கும் `காவியன்' படத்தின் முன்னோட்டம்.
காவியன்
Published on

`2எம் சினிமாஸ்' சார்பில் கே.வி.சபரீஷ் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் படம் `காவியன்'.

நடிகர் ஷாம் நாயகனாகவும், ஆத்மியா நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் வில்லனாக நடித்துள்ளார்.

ரோட் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தை சாரதி இயக்கியிருக்கிறார். 

ஒளிப்பதிவு - என்.எஸ்.ராஜேஷ் குமார், இசை - ஷ்யாம் மோகன், பாடல்கள் - மோகன்ராஜ், ஸ்டன்ட் - ஸ்டன்ட் சிவா, கலை - டி.என்.கபிலன், நடனம் - விஷ்ணுதேவா, படத்தொகுப்பு - அருண்தாமஸ், தயாரிப்பு - 2எம் சினிமாஸ், எழுத்து, இயக்கம் - சாரதி.

படம் குறித்து தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ் பேசும் போது, 

முழுக்க முழுக்க அமெரிக்காவிலுள்ள லாஸ்வேஹாசில் ஹாலிவுட் தரத்தில் உருவாகியுள்ள முதல் தமிழ் திரைப்படம் இது என்ற பெருமையை காவியன் நிச்சயம் பெரும். சண்டைக் காட்சிகளும், திரைக்கதையும் தொடக்கம் முதல் இறுதிவரை பிரமிக்கும் வகையில் இருக்கும். மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ள இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. என்றார்.

தெலுங்கில் இந்த படம் `வாடு ஒஸ்தாடு' என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com