`காலா' படத்தில் இரு ஹீரோயின்கள்: ரஜினி ஜோடி யார்?

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள `காலா' படத்தில் இரு ஹீரோயின்களில் ரஜினி ஜோடி யார் தெரியுமா?
`காலா' படத்தில் இரு ஹீரோயின்கள்: ரஜினி ஜோடி யார்?
Published on

நேற்று முன்தினம் வெளியான `காலா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கரிகாலன் என்று பெயருடைய ரஜினியை சுருக்கமாக காலா என்று அழைப்பதால் இப்படத்திற்கு `காலா' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

மும்பை தாராவில் வாழும் ஒரு தென்னிந்திய தமிழனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் தொடங்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து சென்னையிலும் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது. அதற்காக சென்னை பூந்தமல்லி அருகே பிரபல ஸ்டூடியோவில் மும்பை போன்ற பிரம்மாண்ட செட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

படத்தில் இடம்பெறும் பிரபலங்கள் யார் யார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே வெளியிடப்பட்டது. இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதுதவிர `காலா' படத்தில் ஹூமா குரோஷி நடிக்கிறாரா? அல்லது அஞ்சலி பாட்டீல் நடிக்கிறாரா? என்று ரசிகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. `காலா' படத்தில் நடிப்பதை, அஞ்சலி பாட்டீல் அவரது டுவிட்டர் பக்கத்திலேயே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com