இளம் இசையமைப்பாளருக்கு அடித்தது ஜாக்பாட் - பிரபாஸின் பிரம்மாண்ட படத்திற்கு இசையமைக்கிறார்

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராதே ஷ்யாம்’ படத்திற்கு இளம் இசையமைப்பாளர் ஒருவர் இசையமைக்க உள்ளாராம்.
ராதே ஷ்யாம் பட போஸ்டர்
ராதே ஷ்யாம் பட போஸ்டர்
Published on

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். ராதா கிருஷ்ணகுமார் இயக்குகிறார். அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. கொரோனா அச்சுறுத்தால் நிறுத்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் பண்ணையாரும் பத்மினியும், ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் என சிறு பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வந்த இவருக்கு இப்படம் ஒரு ஜாக்பாட் தான். கடந்தாண்டு தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான டியர் காம்ரேட் படத்திற்கு இவர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com