`கொரில்லா' படத்தில் நடிக்கும் ஜீவா

`கலகலப்பு-2', `கீ' என பிசியாக நடித்து வரும் ஜீவா, அடுத்ததாக டான் சாண்டி இயக்கத்தில் நடிக்கும் ஹெய்ஸ்ட் காமெடி படத்திற்கு `கொரில்லா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
`கொரில்லா' படத்தில் நடிக்கும் ஜீவா
Published on

`கலகலப்பு-2' படத்தை முடித்த ஜீவா தற்போது காலீஸ் இயக்கத்தில் `கீ' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில், ஜீவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது. ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா தயாரிக்கும் படத்தில் ஜீவா நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டான் சாண்டி இயக்கும் இந்த படத்தில் ஜீவா ஜோடியாக `அர்ஜுன் ரெட்டி' புகழ் ஷாலினி பாண்டே நடிக்கிறார். 

ஹெய்ஸ்ட் (திருட்டு சம்பந்தப்பட்ட) காமெடி த்ரில்லர் ஜேனரில் ஜீவாவின் 29-வது படமாக இந்த படம் உருவாகிறது. இதற்கு `விக்ரம் வேதா' புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். இந்தப் படத்தில் ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விஷயம் ஒன்றும் இடம்பெறுவதாக இயக்குநர் கூறியிருக்கிறார். 

ஆர்.ஜே.பாலாஜி மற்றும் யோகி பாபு இணைந்து காமெடியில் கலக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஜனவரியில் இந்த படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கு `கொரில்லா' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

X

Maalai Malar
www.maalaimalar.com