

ஜீவா, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாக நடிக்கும் இதில் மஞ்சிமா மோகன், பிரியா பவனி சங்கர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மேலும் ராதாரவி, ரோபோசங்கர், பால சரவணன் இளவரசு, ஆடுகளம் நரேன், மாரிமுத்து, வேலராமமூர்த்தி, ரேணுகா, ஸ்ரீரஞ்சனி, பூலோகம் ராஜேஷ், பெனிடோ ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் .
இவர்களுடன் பிசாசு பட புகழ் பிரக்யா மார்ட்டின் கௌரவ வேடத்தில் தோன்றுகிறார்.
"களத்தில் சந்திப்போம்" படம் இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அதிரடி ஆக்சன் கமர்சியல் படமாக உருவாகியுள்ளது. நட்பு, காதல், நகைச்சுவை, அதிரடி என அனைத்து அம்சங்களும் நிறைந்த ஜனரஞ்சக படம் இது.
தற்போது களத்தில் சந்திப்போம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை நடிகர் ஆர்யா மற்றும் விஜய்சேதுபதி ஆகியோர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.