100 கோடி வசூலில் இணைந்த ஜான்வி கபூரின் தடக்

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் `தடக்' படத்தின் மொத்த வசூல் ரூ.100 கோடியை தாண்டியுள்ளது. #Dhadak #JhanviKapoor
100 கோடி வசூலில் இணைந்த ஜான்வி கபூரின் தடக்
Published on

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் ‘தடக். இஷான், ஜான்வி இணைந்து நடித்துள்ள இந்த படத்தை சஷாங் கைட்டான் இயக்கி உள்ளார். படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கரன் ஜோகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “தடக் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.

அறிமுக நடிகர்களின் படம் வசூல் சாதனை படைப்பது அரிது. ஜான்வி, இஷான் உங்களை நினைக்கும்போது பெருமையாக உள்ளது” என பதிவிட்டுள்ளார். மராத்தியில் நாகராஜ் மஞ்சுளே இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான ‘சாய்ரத்’ படத்தின் ரீமேக்காக இந்தப் படம் உருவானது.

ஆணவக் கொலையை மையமாகக் கொண்டு உருவாகி இருந்த இந்த படம் மராத்தியில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி அங்கும் வசூல் சாதனை புரிந்தது. சாதிய ஆணவக் கொலை இந்தியா முழுக்க உள்ள பிரச்சினை என்பதால் இந்தியிலும் ரசிகர்களால் இப்படம் கொண்டாடப்பட்டு வருகிறது. #Dhadak #JhanviKapoor #IshaanKhattar

X

Maalai Malar
www.maalaimalar.com