ஜெயிக்கப்போவது யாரு

சக்திஸ் காட் இயக்கி, நடித்து கார் பந்தய காமெடி கலாட்டாவை மையமாக வைத்து கின்னஸ் சாதனைக்காக உருவாக்கியிருக்கும் ‘ஜெயிக்கப்போவது யாரு’ படத்தின் முன்னோட்டம்.
ஜெயிக்கப்போவது யாரு
Published on

டிட்டு புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பாக பானு சித்ரா தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கபோவது யாரு’.

இந்த படத்தில் சக்திஸ் காட் கதாநாயகனாக நடிக்கிறார். நாயகியாக வந்தனா நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.பாண்டியராஜன், பவர் ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள். 

இசை - சக்திஸ்காட், ஆண்டன் ஜெப்ரின் நடிப்பு, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சக்தி ஸ்காட். இயக்குனர் சக்தி ஸ்காட் படம் பற்றி கூறும் போது....

“இது கார் பந்தயத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் பல கெட்-அப்களில் வந்து காமெடியில் அசத்தி இருக்கிறார். இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ் என சினிமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன்.

இதுவரை 15 துறைகளை ஒரே ஒரு மனிதனாக ஜாக்கிசான் ‘ஜோடியாக்’ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012-ஆம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.

அதற்கு பிறகு நான் 29 துறைகளில் பணியாற்றி இந்த படத்தை முடித்துள்ளேன். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும் இடம் பெறும்” என்று நம்பிக்கையுடன் கூறினார்.

‘ஜெயிக்கப்போவது யாரு’ படத்தின் இசையை இசை அமைப்பாளர் டி.இமான் வெளியிட்டார். படம் விரை வில் திரைக்கு வருகிறது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com