கதாநாயகியான ஜீவிதா மகள் ஷிவானி

நட்சத்திர தம்பதிகளான ராஜசேகர்-ஜீவிதா மகள் ஷிவானி புதிய படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். #Shivani
கதாநாயகியான ஜீவிதா மகள் ஷிவானி
Published on

இந்தியில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ‘2 ஸ்டேட்ஸ்’ படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. இந்த படத்தில்தான் ஷிவானி கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகனாக ஆத்விகேஷ் நடிக்கிறார். வெங்கட் டைரக்டு செய்கிறார்.

கதாநாயகியாக நடிப்பது குறித்து ஷிவானி கூறும்போது, “சினிமாவில் முதன்முதலாக சவாலான கதாபாத்திரத்தில் அறிமுகமாக வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. இயக்குனர் வெங்கட் சொன்ன கதை மிகவும் பிடித்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். நான் நடிகையாவதற்கு சம்மதம் தெரிவித்த எனது பெற்றோர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படக்குழுவினர் என்னை இளவரசிபோல் பார்த்துக்கொள்கிறார்கள். இந்த படத்துக்கு பிறகு சினிமாவில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com