வருமான வரித்துறை சோதனையால் 3-வது நாளாக முடங்கிய ஜாஸ் சினிமாஸ்

வருமான வரித்துறை சோதனையால் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸில் 3-வது நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை சோதனையால் 3-வது நாளாக முடங்கிய ஜாஸ் சினிமாஸ்
Published on

சசிகலாவின் உறவினர் வீடுகள், தொழிலகங்கள் என பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.

அந்தவகையில், ஜெயா டி.வி.யின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் விவேக்குக்கு சொந்தமாக வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் ஜாஸ் சினிமா என்ற பெயரில் தியேட்டர்கள் உள்ளன. இங்கு 12 திரைகள் உள்ளன.

நேற்று முன்தினம் காலையில் வருமான வரி சோதனை தொடங்கியதை தொடர்ந்து 12 திரைகளிலும் காட்சிகள் நிறுத்தப்பட்டன. இதனால் தியேட்டரில் முன்பதிவு செய்தவர்கள் தங்களது காட்சியின் போது சினிமா பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

அங்கு நேற்று முன்தினம் தொடங்கிய இந்த சோதனை இன்று 3-வது நாளாகவும் தொடர்கிறது. இதனால் இன்றைய காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com